Tamil Top 10 News: ’தங்கலான் படத்திற்கு தடை இல்லை! குடியரசுத் தலைவரை சந்தித்த ராகுல்!’ இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
Tamil Top 10 News: குடியரசுத் தலைவரை சந்தித்த ராகுல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, தேவநாதன் யாதவ் நிதி மோசடி வழக்கு, ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Evening Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
குடியரசுத் தலைவர் உடன் ராகுல் காந்தி சந்திப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்றதற்கு பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
தேவநாதன் யாதவுக்கு 14 நாள் காவல்
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு உள்ளது. தி மயிலாப்பூர் சாஸ்வத நிதி நிறுவனத் தலைவராக இருக்கும் தேவநாதன் யாதவ் 50 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஜாபர் சாதிக் தம்பிக்கு காவல்
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 7 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- நாகேந்திரனுக்கு காவல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக் இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்து செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனுக்கு 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
தூக்கில் போட வேண்டும்! - மம்தா பேச்சு
பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
மம்தா அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பயிற்சி மருத்துவர் கொலையை மூடி மறைக்க முயற்சிகள் நடைபெறுவதாக மேற்கு வங்க மாநில அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தல்.
’தலித் முதலமைச்சர் ஆக முடியாது!’-திருமா வேதனை
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித் முதலமைச்சராக வர முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். திமுக அரசு என்பது நிலையானது அல்ல; மாநில அரசுதான் நிலையானது என்றும் அவர் கூறினார்.
காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கம் அறிவிப்பு
சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தலா 8 கிராம் தங்கப்பதக்கத்துடன், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என அறிவிப்பு.
தங்கலான் படத்தை வெளியிட தடை இல்லை
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படத்தை நாளை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு
ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்து உள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுகவும் புறக்கணித்து உள்ளது.
டாபிக்ஸ்