TOP 10 NEWS: ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் முதல் 11 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை வரை! டாப் 10 நியூஸ்
TOP 10 NEWS: ஆளுநர் மீது சபாநாயகர் அப்பாவு விமர்சனம், குட்கா வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை, 11 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.ஆளுநர் மீது சபாநாயகர் விமர்சனம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காரணம் கூறாமல் ஆளுநர் நிறுத்தி வைத்து உள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை மசோதாக்களுக்கு ஆளுநர் ஓரிரு மணி நேரத்தில் ஒப்புதல் தருகிறார். ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தில் முடங்கி கிடக்கின்றது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேச்சு.
2.குட்கா வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை
குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தகவல். கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல் பெற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜர் ஆக உத்தரவு.
3.பூணூல் அறுப்பு புகாருக்கு போலீஸ் மறுப்பு
நெல்லையில் அகிலேஷ் என்பவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வில் பூணூல் அறுக்கப்படவில்லை என நெல்லை மாநகர காவல்துறை விளக்கம்.
4.ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் தப்பி ஓட முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரன் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ஜம்புகேஸ்வரன் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
5.கிண்டி ரேஸ் கிளப் நீர்நிலையாக மாற்றமா?
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவதன் மூலம் சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பை குறைக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் கருத்து.
6.மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் கேரள மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த புகார் குறித்து காவல்துறை விசாரணை.
7.11 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.
8.சதம் அடித்த வெயில்
தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் 100 டிகிரி பாராண்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. பரமத்தியில் 102 டிகிரி பாராண்ஹீட், நாகையில் 102 டிகிரி பாராண்ஹீட், ஈரோட்டில் 101 டிகிரி பாராண்ஹீட், தஞ்சையில் 100 டிகிரி பாராண்ஹீட் வெப்பம் பதிவு.
9.கோயம்பேட்டை பூங்காவாக மாற்ற வேண்டும்
சென்னையில் கிண்டி பூங்கா தவிர, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் அமைந்துள்ள 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
10.திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம்
இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார். அது சரி, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.சிலரை சிலநாள் ஏமாற்றலாம்.பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
டாபிக்ஸ்