TOP 10 NEWS: பெரியாருக்கு விஜய் மரியாதை முதல் திமுக முப்பெரும் விழா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: பெரியாருக்கு விஜய் மரியாதை முதல் திமுக முப்பெரும் விழா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: பெரியாருக்கு விஜய் மரியாதை முதல் திமுக முப்பெரும் விழா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Sep 17, 2024 07:17 PM IST

TOP 10 NEWS: பெரியாருக்கு மரியாதை செலுத்திய விஜய், திமுக முப்பெரும் விழா, புதுச்சேரியில் பந்த் அறிவிப்பு, திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: பெரியாருக்கு விஜய் மரியாதை முதல் திமுக முப்பெரும் விழா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: பெரியாருக்கு விஜய் மரியாதை முதல் திமுக முப்பெரும் விழா வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

1.திமுக முப்பெரும் விழா

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் பாப்பம்பாளுக்கு பெரியார் விருது, மிசா ராமநாதனுக்கு அண்ணா விருது, ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது, தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருது, வி.பி.ராஜனுக்கு பேராசிரியர் விருது விருது, எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டது. 

2.முதன்மை கல்வி அலுவலர் இடமாற்றம் 

மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மீது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை. 

3.புதுச்சேரியில் பந்த் அறிவிப்பு 

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை இந்திய கூட்டணி கட்சிகள் பந்த் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

4.பெரியாருக்கு விஜய் மரியாதை 

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று மரியாதை. 

5.பௌர்ணமி கிரிவலம்

புரட்டாசி மாத கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்.

6.தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும். 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிப்பதால் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

7.கால்நடை மருத்துவப்படிப்பு சேர்க்கை

கால்நடை மருத்துவப்படிப்பில் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

8.தந்தை பெரியாருக்கு மரியாதை

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை.

9.திமுக பவள விழா கொண்டாட்டம்

சென்னையில் இன்று மாலை திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெறுகிறது. “நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

10.மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தேவைப்படும் காலங்களில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர்களாக பணியாற்ற தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு விளம்பரத்தை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கானக் குழு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும், கல்வியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை என மருத்துவர் ராமதாஸ் கருத்து.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.