TOP 10 NEWS: மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு முதல் மழை எச்சரிக்கை வரை! டாப் 10 நியூஸ்-todays evening news highlights director mohan ji booked in 5 sections rain warning in tamil nadu - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு முதல் மழை எச்சரிக்கை வரை! டாப் 10 நியூஸ்

TOP 10 NEWS: மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு முதல் மழை எச்சரிக்கை வரை! டாப் 10 நியூஸ்

Kathiravan V HT Tamil
Sep 24, 2024 07:46 PM IST

TOP 10 NEWS: இயக்குநர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, மோகன் ஜி கைதுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்.

TOP 10 NEWS: மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு முதல் மழை எச்சரிக்கை வரை! டாப் 10 நியூஸ்
TOP 10 NEWS: மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு முதல் மழை எச்சரிக்கை வரை! டாப் 10 நியூஸ்

1.மழை எச்சரிக்கை 

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.

2.சதம் அடித்த வெயில் 

தமிழ்நாட்டில் மதுரை, தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர் பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவு.

3.இயக்குநர் மோகன் ஜி மீது வழக்குப்பதிவு 

பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பி கைதான திரைப்பட இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

4.யானைகள் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம் 

நீலகிரி மாவட்டம் சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, வன பாதுகாப்பு குறித்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

5.அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் பேட்டி

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி. வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதே வெள்ளை அறிக்கை போன்றதுதான் என்றும் கருத்து.

6.திமுகவை கிண்டல் அடிக்கும் தமிழிசை

தமிழக அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும். உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.

7.மோகன் ஜி கைதுக்கு பாமக கண்டனம் 

தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் எந்த வித குற்றமும் செய்யாத நிலையில் சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த ஒரு வழக்கிலும் ஒருவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கும் நிலையில், அவை எதையும் கடைபிடிக்காமல், ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல மோகனை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

8.ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிக நிர்வாகிகள் எதிர்ப்பு

திமுக - விசிக கூட்டணி தொடர்பாக ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேட்டி.

9.வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது ரூபாய் 33 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு. ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு ரூபாய் 28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

10.பிரதமர் மோடிக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இந்தியப் பிரதமர் பதவியை அலங்கரிக்கும் தாங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவையையும், முக்கியத்துவத்தையும் முழுமையாக அறிந்திருப்பீர்கள். எனவே, இந்தியாவில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.