Tamil Top 10 News: ‘விடுதலை ஆகும் சவுக்கு சங்கர்! தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!
Afternoon Top 10 News: தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து, மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக வழக்கறிஞர் ஆஜர் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
Afternoon Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்
அரசு பள்ளி மாணவிகளை போலவே அரசு பள்ளி மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ’தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயன் அடைவார்கள்.
2.திசைமாறாமல் உயர்கல்வி படியுங்கள்
பள்ளிப்படிப்பு முடித்த மாணவர்கள் திசை மாறாமல் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ”வரலாற்றில் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதிற்கு நெருக்கமான திட்டங்களாக இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக தமிழ் புதல்வன் திட்டம் உருவாகி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைக்க நான் கோவை மண்டலத்தை தேர்வு செய்து உள்ளேன். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை உள்ள பகுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
3.சவுக்கு சங்கரின் குண்டர் சட்டம் ரத்து
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது. சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்து உள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் மீது வேறு வழக்கு இல்லை என்றால் அவரை விடுதலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர். இதனால் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக சிறையில் உள்ள சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
4.அதிமுக போராட்டம் அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட பல்லாவரத்தில் வரும் 12ஆம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு.
5.தமிழக மீனவர்கள் கைது!
கடந்த 5 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளதாக மீனவர் சங்கங்கள் புகார்.
6.மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
7.டெல்லியில் தீவிரவாதி கைது!
மூன்று லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த தீவிரவாதி ரிஸ்வான் அப்துல் டெல்லியில் கைது.
8.விசாரணை கைதி உயிரிழப்பு
விழுப்புரத்தில் விசாரணை கைதி அற்புதராஜ் சிறையில் உயிரிழந்தார். அடிதடி வழக்கில் கைதான மறுநாள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.
9.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் இரண்டாவது முறையாக காவல்துறையினர் விசாரணை.
10.வினேஷ் போகத் மேல்முறையீடு
வினேஷ் போகத் மேல் முறையீடு விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே இந்தியா சார்பில் ஆஜர் ஆகிறார்.
டாபிக்ஸ்