TOP 10 NEWS: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!-todays afternoon top 10 news including vijay party registered with election commission another case against mahavishnu - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Sep 08, 2024 02:26 PM IST

நடிகர் விஜய் தொடங்கி உள்ள தவெக கட்சி பதிவு, சிகாகோவில் பேசிய முதலமைச்சர், வெள்ளை அறிக்கை கேட்கும் எடப்பாடி பழனிசாமி, சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு உள்ளிட்ட பல்வேறு செய்திகளின் முக்கியத் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: ’பதிவு செய்யப்பட்டது விஜய் கட்சி! மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

1.பதிவு செய்யப்பட்டது தவெக

நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. 

2.விரைவில் மாநாட்டுக்கான அறிவிப்பு

தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வளம் வருவோம். மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரும் வரை காத்திருங்கள் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் அறிக்கை. 

3.புஸ்ஸி ஆனந்த் பேட்டி

தளபதியின் அயராத உழைப்பின் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி. 

4.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  

2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் ஆலோசனை. 

5.நடிகர் சங்க கடனை அடைக்க நிகழ்ச்சி 

நடிகர் சங்க கடனை அடைப்பதற்கான நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொள்வதாக நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கார்த்தி பேச்சு. 

6.நடிகர் சங்க பதவிக்காலம் நீட்டிப்பு 

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க பொதுக்குழுவில் தீர்மானம். 

7.திமுக அரசு இனத்தின் அரசு - மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாட்டில் நடப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசு. தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தாய் வீடாக தமிழ்நாடு உள்ளது என சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

8.வெள்ளை அறிக்கை கேட்கும் ஈபிஎஸ்

திமுக ஆட்சியில் எத்தனை தொழிற்சாலைகள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல். 

9.மகா விஷ்ணு மீது மீண்டும் ஒரு வழக்கு 

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் பதிவு. 

10.மகா விஷ்ணு வாக்குமூலம் 

மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் வகையிலேயே பேசியதாக மகாவிஷ்ணு வாக்குமூலம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.