Tamil Top 10 News : அதானி குழும முறைகேட்டில் ‘செபி’ தலைவரின் பங்கு முதல் ஒலிம்பிக் நிறைவு விழா வரையான முக்கிய செய்திகள்!
Tamil Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
அதானி குழும முறைகேடு நிறுவனங்களில் ‘செபி’ தலைவரின் பங்குகள்
விசில்ப்ளோவர் ஆவணங்களை மேற்கோள் காட்டி, ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சந்தை ஒழுங்குமுறை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் அதானி குழுமத்தின் நிதி முறைகேடு தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் பிரதமர் ஆய்வு
கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலர் தங்கள் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தனர். அதே சமயம் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் மலை கிராமங்கள் உருக்குலைந்து போயின. இந்த கோர சம்பவத்தில் 418 பேர் உயிரிழந்தனர். இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் பொது மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களது மறு வாழ்விற்கு அனைத்து உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
பொன் மாணிக்கவேல் மீது13 பிரிவுகளின் கீழ் வழக்கு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொன்மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது சிபிஐ சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக பொன் மாணிக்கமே மீது சில கடத்தல் பிரிவு போலீசாரே புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 3 மணி நேர மழை நிலவரம்.
தமிழகத்தில் மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி , தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முதுநிலை நீட் தேர்வு
இன்று நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை டுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நிதியுதவு
வயநாடு நிலச்சரிவில் பிதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார்.
ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா
உலகின் மிகப்பெரிய ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாலிபால், மல்யுத்தம் உட்பட 9 போட்டிகளில் 13 தங்கப்பதக்கத்திற்கான போட்டிகள் நடைபெற உள்ளது. நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், மீண்டும் வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்திய இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளனர்.
மினி மாரத்தான்
உலக இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டம், தாராசுரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி இதயா கல்லூரி வரை நடந்தது
நடுவானில் பயணித்த முதியவர் உயிரிழப்பு
ஜெர்மனியின் ஃப்ராங்க ஃபார்ட் நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்த ஆழ்வார் பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் என்ற 92 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்