Wayanad: நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் இன்று 'திடீர் மர்ம சத்தம்'.. அலறி அடித்து வீதிக்கு ஓடிய மக்கள்!-mysterious noise sparks panic in landslide hit wayanad kerala - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Wayanad: நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் இன்று 'திடீர் மர்ம சத்தம்'.. அலறி அடித்து வீதிக்கு ஓடிய மக்கள்!

Wayanad: நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் இன்று 'திடீர் மர்ம சத்தம்'.. அலறி அடித்து வீதிக்கு ஓடிய மக்கள்!

Karthikeyan S HT Tamil
Aug 09, 2024 03:32 PM IST

Wayanad: கேரள மாநிலம் வயநாட்டில் திடீரென மர்ம சத்தம் கேட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மர்ம சத்தம் கேட்டதை அடுத்து வீடுகளை வீட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

Wayanad: நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் இன்று 'திடீர் மர்ம சத்தம்'.. அலறி அடித்து வீதிக்கு ஓடிய மக்கள்!
Wayanad: நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் இன்று 'திடீர் மர்ம சத்தம்'.. அலறி அடித்து வீதிக்கு ஓடிய மக்கள்!

பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக வயநாடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அம்பலவயல் கிராமம் மற்றும் வைத்திரி தாலுகாவின் சில பகுதிகளில் இந்த சத்தம் மற்றும் அதிர்வு உணரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மர்ம சத்தம் கேட்டதை அடுத்து வீடுகளை வீட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

வயநாடு மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.மேகஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது." என்றார்.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (கே.எஸ்.டி.எம்.ஏ) நில அதிர்வு பதிவுகளை ஆராய்ந்து வருவதாகவும், ஏதேனும் முரண்பாடானதா என்பதை தீர்மானிக்க உள்ளூர் உளவு பணிகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

"இப்போதைக்கு, நில அதிர்வு பதிவுகள் இயக்கங்களின் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை" என்று அந்த ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நிலஅதிர்வு மையம் மறுப்பு

கேரளாவில் உள்ள மலை மாவட்டத்தில் உள்ள பல பஞ்சாயத்துகளில் வசிப்பவர்கள் இன்று அதிகாலையில் பலத்த சத்தம் கேட்டதாகவும் நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்ததை அடுத்து, வயநாட்டில் நில அதிர்வு எதுவும் இல்லை என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது.

மீண்டும் நிலச்சரிவு

இதனிடையே, கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் மூணாறு-கொச்சி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

வயநாடு நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த பெருமழை காரணமாக கடந்த 30ஆம் தேதி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் பாகங்களின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் தற்போது நிலத்தடியில் இருந்து வந்த மர்மமான சத்தம் குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.