Tamil Top 10 News: புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பு முதல் பிரபல ரவுடி என்கவுன்டர் வரை - டாப் 10 நியூஸ்!-today afternoon top 10 news with tamil nadu national and world on august 19 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பு முதல் பிரபல ரவுடி என்கவுன்டர் வரை - டாப் 10 நியூஸ்!

Tamil Top 10 News: புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பு முதல் பிரபல ரவுடி என்கவுன்டர் வரை - டாப் 10 நியூஸ்!

Karthikeyan S HT Tamil
Aug 19, 2024 01:29 PM IST

Tamil Top 10 News: புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்பு, எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி, பிரபல ரவுடி என்கவுன்டர் உள்பட பிற்பகல் டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பு முதல் பிரபல ரவுடி என்கவுன்டர் வரை - டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பு முதல் பிரபல ரவுடி என்கவுன்டர் வரை - டாப் 10 நியூஸ்!

புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்பு

தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து முதல்வரின் தனிச் செயலராக இருந்த நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரஷ்ய ராணுவத்தில் இருந்த கேரள இளைஞர் உயிரிழப்பு

உக்ரைன் குண்டுவீச்சால் ரஷ்ய படையில் இருந்த கேரள இளைஞர் உயிரிழந்தார். உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

கலைஞர் நூற்றாண்டு நாணயத்தில் இந்தி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு பதில் அளித்துள்ளார். தலைவர்களுக்கு மத்திய அரசு நாணயம் வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் தான் இருக்கும் என்றும், தமிழ் வெல்லும் என்ற வாசகம் கலைஞர் கையெழுத்தில் தமிழில்தானே உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.

செங்கோட்டை ரயில் தாமதம்

தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இன்று இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு தாமதமாக, தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களால் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சதியை முறியடிக்க வேண்டும் - வைகோ ஆவேசம்

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம்!

தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலினின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் இந்தப் புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆக.21-ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்திய வீராங்கனையின் சிக்ஸரால் வெற்றி பெற்ற லண்டன் ஸ்பிரிட் அணி

தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் போட்டி 2024 லண்டனில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று நடந்த பைனல் போட்டியில் வேல்ஷ் ஃபயர் மகளிர் அணியும், லண்டன் ஸ்பிரிட் அணியும் மோதின. இதில், லண்டன் ஸ்பிரிட் அணியில் இந்தியாவைச் சேர்ந்த தீப்தி ஷர்மாவும் விளையாடினார். இவர் அடித்த சிக்ஸர் மூலம் லண்டன் அணி மேட்ச்சில் வெற்றி பெற்றது.

ஹரியானாவில் மற்றொரு பெண் மருத்துவ மாணவி தாக்கப்பட்டார்

அதிர்ச்சியூட்டும் வகையில், பிஜிஐ, ரோஹ்தக், ஹரியானாவைச் சேர்ந்த பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவி பிராச்சி, தன்னை விட மூத்தவரான மனிந்தர் கௌஷிக், முதலாம் ஆண்டு உடற்கூறியல் பிஜி மாணவனால் 7 மாதங்களாக உடல்ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மாணவிக்கு உடலில் பல காயங்கள் உள்ளன. இந்த வீடியோ வைரலாக மாறியதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

பிரபல ரவுடி என்கவுன்டர்

கன்னியாகுமரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி செல்வத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். 6 கொலை உட்பட 28 வழக்குகளில் தொடர்புடைய செல்வத்தை பிடிக்க முயற்சி செய்தபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தி, அவரை பிடித்துள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த காவலர் ஒருவரும் ரவுடியும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப்பின் ரவுடிகள் மீது அடுத்தடுத்து என்கவுன்டர் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.