தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 1, குரூப் 1b, 1c தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 1, குரூப் 1B, 1C தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 24, 2024 06:13 PM IST

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 6, 244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 1,.4, 1B, 1C தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
குரூப் 1,.4, 1B, 1C தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி இந்த குரூப் 4 குறித்த தேர்வு குறித்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28ஆம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைகிறது. 

இதர டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையர், மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளில் 29 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1B, 1C தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர். தனி செயலாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 6244 குரூப் 4 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தது.

ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர் ஒரு முறை பதிவில் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு திருத்தங்களை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு வனத்துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு நடைபெறும் இடத்தில், அனுமதிக்கப்பட்ட எழுதும் பொருளான கருப்பு-மை பால்பாயிண்ட் பேனா தவிர, வேறு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிஉ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லுலார் ஃபோன்கள், கால்குலேட்டர்கள், கைக்கடிகாரங்கள், உள்ளடிக்கிய நினைவகத்துடன் கூடிய மோதிரங்கள் புளூடூத் சாதனங்கள், தகவல் தொடர்பு சில்லுகள், ரெக்கார்டிங் சாதனங்கள் தனி துண்டு உள்ளிட்ட எந்த பொருட்களும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து ஆட்சேர்ப்புகளும் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலானவை என்றும் நியாமற்ற வழிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்