PSLV C56: 7 செயற்கை கோள்களை ஏவும் திட்டம் வெற்றி -இஸ்ரோ
திட்டப்படி 7செயற்கை கோள்களும் அதன் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி56 ராக்கெட் இன்று காலை 6.31 மணியளவில் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் 7 செயற்கை கோள்களை ஏவும் திட்டம் வெற்றி அடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. திட்டப்படி 7செயற்கை கோள்களும் அதன் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
வணிகப்பயன்பாட்டிற்காக ஏழு சிங்கப்பூர் சாட்டிலைட்டுகளுடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று (30.07.2023) பிஎஸ்எல்வி சி 56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது டிஎஸ் – சார் மிஷன் என்றும் அழைக்கப்படுகிறது. போலார் சாட்டிலை லாஞ்ச் வெகிகிளின் இந்தாண்டின் இரண்டாவது திட்டம். ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 56 முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த திட்டம், நியூ ஸ்பேஸ் இந்தியாவுடன் இணைந்து ஏவுகிறது. பிஸ்எல்வி-சி56 இஸ்ரோவின் 90வது விண்வெளி திட்டமாகும்.
டிஎஸ் – சார், 360 கிலோகிராம் எடைகொண்ட சாட்டிலைட், ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துடன் (டிஎஸ்டிஏ) சேர்ந்து உருவாக்கியது. இம்மையம் சிங்கப்பூர் அரசின் கீழ் செயல்படும் மையமாகும் மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் என்ற சிங்கப்பூரின் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப குழுவாகும்.