தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc: டி.என்.பி.எஸ்.சி குரூப் -2/2ஏ பணிகளுக்கு வயது வரம்பினை நிர்ணயிக்கக் கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ்

TNPSC: டி.என்.பி.எஸ்.சி குரூப் -2/2ஏ பணிகளுக்கு வயது வரம்பினை நிர்ணயிக்கக் கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ்

Marimuthu M HT Tamil
Jun 23, 2024 07:31 PM IST

TNPSC: டி.என்.பி.எஸ்.சி தொகுதி -2 பணிகளுக்கு வயது வரம்பினை நிர்ணயிக்கக் கூடாது எனவும்,அவ்வாறு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

TNPSC: டி.என்.பி.எஸ்.சி குரூப் -2/2ஏ பணிகளுக்கு வயது வரம்பினை நிர்ணயிக்கக் கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ்
TNPSC: டி.என்.பி.எஸ்.சி குரூப் -2/2ஏ பணிகளுக்கு வயது வரம்பினை நிர்ணயிக்கக் கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ்

TNPSC: டி.என்.பி.எஸ்.சி தொகுதி -2 பணிகளுக்கு வயது வரம்பினை நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என்றும்; அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

446 பணியிடங்களுக்கு வயது நிர்ணயம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை:

இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக அரசுத் துறைகளுக்கு துணை வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர், வனவர், பல்வேறு துறைகளுக்கான உதவியாளர்கள் என மொத்தம் 61 வகையான பணிகளில் காலியாக உள்ள 2327 இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தொகுதி 2/ 2ஏ தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) அறிவித்திருக்கிறது.