TN Wet Land : பரந்தூர் ஈரநிலங்கள் காக்கப்படுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்யுமா – சூழல் ஆர்வலர்கள் கேள்வி!
TN Wet Land : தமிழகத்தில் உள்ள அனைத்து ஈரநிலங்களின் வரைபடத்தை தயாரிக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் செய்ததுபோல், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஈரநிலங்களின் வரைபடங்களை தயாரிக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
ஈரநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு, இந்த பணிநிறைவை அவ்வப்போது நீதிமன்றத்திற்கு, அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தவும், தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து ஈரநிலங்களின் வரைபடம் தயாரிக்கும் பணியை ஜுன், 2024ல் தொடங்கி, விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, உயர்நீதிமன்றம் அதனால் நியமிக்கப்பட்ட, வழக்கில் உதவும் அதிகாரி, (Amicus Curiae) மோகன் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் ஈரநிலங்கள் குறித்து தயாரித்த வரைபடங்களின் அடிப்படையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஈரநிலங்களின் வரைபடத்தை தயாரித்து, அதை 2011ல் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு, நேரில் சென்று ஆய்வுசெய்து, ஆய்வு முடிவுகளை உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
பின்னர், மக்களிடம் வரைபடம் குறித்தான ஆட்சேபங்கள் ஏதும் இருப்பின், அதிலுள்ள சந்தேகங்களை சரிசெய்து, இறுதி அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு 2017 Wetlands Rulesன் விதிகளுக்கு உட்பட்டு முன்வைக்க உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் வரைபடங்கள் பணி முடிந்த பின்னரும், நேரில் சென்று உறுதிபடுத்தும் பணியை தமிழக அரசு ஒன்றரை ஆண்டுகளாகியும் தொடங்காமல் இருக்க காரணம் என்ன?
2017ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி, உச்சநீதிமன்ற ஈரநிலங்களை காக்கும் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக உயர்நீதிமன்றம் தானாக வந்து வழக்கு பதிவுசெய்து, ஈரநிலங்கள் குறித்தான வரைபடங்களை தயாரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனினும், பரந்தூர் விமானநிலைய பணிக்கு 27 சதவீத பரப்பில் இருக்கும் ஈரநிலங்களை அழித்து, தமிழக அரசு உள்ளூர் 13 பஞ்சாயத்து தீர்மானங்களையும் மீறி, விமான நிலையம் அமைக்க முனைப்பு காட்டுவதை உயர்நிதிமன்றம் தானாக முன்வந்து கேள்விளை முன்வைப்பது சிறப்பாக இருக்கும்.
ஈரநிலங்களை காப்பது சுற்றுச்சூழலை காப்பதற்கு ஒப்பாகும். ஏனெனில் அவை கார்பனை உள்வாங்கும் திறன் கொண்டவை.
கடந்த 4 ஆண்டுகளில், 21 மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 9 சதவீதம் என அதிகரித்ததில், தமிழகமும் அதில் ஒரு மாநிலம்.
தமிழகத்தில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மக்களின் மின்தேவை பயன்பாடு 16 சதவீதம் என மட்டுமே உள்ளது.
தமிழக DISCOMs செயல்பாடு சரியாக இல்லாததால், சூரிய மின்சக்தி பகிர்மானம் 2 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
தமிழக DISCOM, FY2023ல் 91.92 பில்லியன் டாலர் இழப்பீட்டை சந்தித்துள்ளது. இது கடந்த ஆண்டு மின்கட்டணத்தை உயர்த்தியும், கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் 600 மில்லியன் டாலர் அதிகம்.
தமிழகத்தில் 2023ல் சூரிய மின்சக்தி 9,000 MW என இலக்கு நிர்ணயித்தாலும், திறந்த பசுமை விதிகளை (Adoption of green open access rules) முறையாக செயல்படுத்தாமல் போனதால், தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மதிப்பீடு எண் குறைந்துள்ளது.
மாற்று எரிசக்தித் திட்டங்களில் கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க மின்னணு வாகன தயாரிப்பில் (Electric Vehicles-EV) தமிழகம் முனைப்புக் காட்டினாலும், ஜனவரி 2024 நிலவரப்படி, 321 மின்வாகன பதிவுகளுக்கு,1 மின் ஓட்டம் ஏற்றும் நிலையம் (Electricity Charging Stations) மட்டுமே உள்ளது.
சுருக்கமாக, நீதிமன்றங்கள் வழக்கு பதிவதோடு நிற்காமல், ஈரநிலங்களை காக்கும் பணிகள் களத்தில் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதோடு, தவறிழைக்கும் அதிகாரிகள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வது சிறப்பாக இருக்கும்.
பரந்தூர் விமானநிலையத்திற்காக, 27 சதவீதம் ஈரநிலங்கள் பரப்பு பாதுகாக்கப்படுவதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்யுமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்