தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம்-அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மின்சாரம்-அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Manigandan K T HT Tamil
Apr 05, 2023 11:42 AM IST

Minister Senthil Balaji: “மின் பகிர்மானத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.”

சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி
சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

மின் பகிர்மானத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. பணிகள் முடிந்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என மும்முனை மின்சாரம் முதல்வரின் உத்தரவின்பேரில் வழங்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை தொகுதியிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

பின்னர், சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன், சிவகங்கை மாவட்டம் விவசாயத்தை முழுமையாக நம்பி இருக்கிறது. 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன்
அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன்

அதற்கு  அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் உத்தரவு. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பணிகள் நிறைவு பெற்றவுடன் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் செந்தில் பாலாஜி.

IPL_Entry_Point

டாபிக்ஸ்