தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tirunelveli, Tiruchendur Railway Line Completes 100 Years

திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதைக்கு இன்று 100 வயது!

Karthikeyan S HT Tamil
Feb 23, 2023 11:30 AM IST

Tirunelveli-Tiruchendur Railway: திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதை - கோப்புபடம்
திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதை - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையே ரயில்பாதை அமைக்கப்பட்டு 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி அன்று முதன்முதலாக ரயில் போக்குவரத்து துவங்கியது. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இந்த ரயில்பாதை வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆறுமுகனேரி மேலவீடு எஸ்.பி. பொன்னையா நாடாா்.

1883 ஆம் ஆண்டு காயல்பட்டினம் உப்பு வர்த்தக் கம்பெனியின் தலைவராக எஸ்.பி. பொன்னையா நாடாா் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உப்பளங்களில் இருந்து உப்பும், மற்றொரு பிரதான உற்பத்திப் பொருளான கருப்பட்டியும் வெளியூர்களுக்கு வண்டிகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தால் பொருள் நஷ்டமும், காலவிரயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில்பாதை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார். 

மேலும், புறையூர் பங்களாவில் முகாமிட்டிருந்த ஜில்லா கலெக்டர் பக்கிள்துரையிடம் ரயில்வே சம்பந்தமான முதல் மனுவை சமர்பித்தார். அதில், திருச்செந்தூரின் ரயில் பாதையின் முக்கியத்துவம் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய வியாபார விருத்தியையும் மக்களுக்கான வசதிகள் குறித்து ஆதாரத்துடன் விளக்கினார்.

இதையடுத்து 1904 ஆம் ஆண்டு டிராபிக் சர்வேயும், பிரதான லைன் சர்வேயும் நடந்துள்ளது. 1914 ஆம் ஆண்டு இப்பாதைக்கு நாள் வேலை செய்து பூமி பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்து 23.02.1923 ஆம் ஆண்டு திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் பாதை திறக்கப்பட்டது. இந்த ரயில் பாதை இன்று அகல ரயில் பாதையாக, மின்சார ரயில் வந்து செல்லும் வகையில் மின்பாதையாகவும், ரயில்வே ஸ்டேஷன்கள் நவீனமயமாகவும் பல்வேறு வளர்ச்சியடைந்து தென் மாவட்டங்களின் முக்கிய இருப்புபாதையாக பல்வேறு வளர்ச்சியடைந்துள்ளது.

1923-ல் திறக்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பாதை அமைக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகளை நிறைவடைந்ததை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் காலை 6.50 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூா்-திருநெல்வேலி­ ரயில் என்ஜின் ஆபரேட்டா், ரயிவே குவாட் ஆகியோா் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்