Jayakumar Death Case: நீடிக்கும் மர்மம்.. நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம் ஏன்?-tirunelveli congress leader jayakumar death case transfer to cbcid - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jayakumar Death Case: நீடிக்கும் மர்மம்.. நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம் ஏன்?

Jayakumar Death Case: நீடிக்கும் மர்மம்.. நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம் ஏன்?

Karthikeyan S HT Tamil
May 23, 2024 02:29 PM IST

Jayakumar Death Case: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Jayakumar Death Case: நீடிக்கும் மர்மம்.. நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம் ஏன்?
Jayakumar Death Case: நீடிக்கும் மர்மம்.. நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம் ஏன்?

சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் கடந்த 2 ஆம் தேதி மாயமானார். இது தொடர்பாக ஜெயக்குமாரின் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உண்மையை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உவரி போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையிலான 10 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.

36 நபர்களிடம் விசாரணை

ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 36 நபர்களிடம் விசாரணை நடத்தியும் வழக்கில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை. ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தே போலீஸாரால் இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை.

சிபிசிஐடிக்கு மாற்றம்

இதற்கிடையே ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு 20 நாட்களை கடந்துவிட்ட நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை. விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரியாக ஆய்வாளர் உலகராணி என்பவரை நியமனம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல்துறை விளக்கம்

ஜெயக்குமார் மரண வாக்குமூலம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். அதில், "கடந்த 30 ஆம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வாக்குமூலம் என்ற பெயரில் புகார் மனு ஒன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்ததாகக் கூறி சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இதுகுறித்து கீழ்க்கண்ட மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது.

கடந்த 02.05.2024 அன்று ஜெயக்குமார் தனசிங் மகனான கருத்தையா ஜெஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையம் சென்று தனது தந்தையை காணவில்லை என புகார் மனு அளித்ததன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணையை துரிதப்படுத்தினார்.

புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை ஆஜர் செய்தார். அந்த கடிதத்தில் 30.04.2024 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம், அவர் புகாரளித்த போதுதான் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு யாரிடமும் புகார் அளிக்கவில்லை.

விசாரணை தொடர்ந்த போது 04.05.2024 காலை அவரது தோட்டத்தில் எரிந்து நிலையில் சடலமாக கிடந்ததையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு வழக்கை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து அறிவியல் பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பல்வேறு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.