தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Thiruverkadu Karumariamman Temple Jewel Stolen

Karumariamman Temple: திருடுபோன அம்மன் தாலி.. அர்ச்சகரின் செயலால் பக்தர்கள் அதிர்ச்சி.. போலீஸார் விசாரணை!

Karthikeyan S HT Tamil
Feb 08, 2024 02:20 PM IST

Thiruverkadu Karumariamman Temple: lதாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவேற்காடு கருமாரியம்மன் அம்மன் கோயில்.
திருவேற்காடு கருமாரியம்மன் அம்மன் கோயில்.

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினம்தோறும் இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

கருமாரியம்மனின் அருளை நாடி வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற பல பலன்களை அள்ளித் தருகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலமாக விளங்கும் இத்திருக்கோயிலில் உற்சவராக வீற்றிருக்கும் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலி செயின் காணாமல் போன சம்பவம் தான் தற்போது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கருமாரியம்மன் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க தாலி செயினை காணவில்லை என கடந்த 5 ஆம் தேதி கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் கோயில் பொறுப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோயில் அதிகாரிகள் விசாரித்த போது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை தற்காலிக அர்ச்சகராகப் பணிபுரிந்த சண்முகம் (எ) பாபு என்பவர் திருடி அடகு வைத்தது தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிப்பதாக கூறிதையடுத்து அடகு வைத்த நகையை மீட்டு திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயினை திருடியதாக அர்ச்சகர் சண்முகம் மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் கோயில் பொறுப்பாளர் கனகசபரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் அர்ச்சகர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது, தலைமறைவாக உள்ள அவரை திருவேற்காடு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

மேலும், அம்மன் தாலி செயினை திருடிய அர்ச்சகர் கடந்த ஓராண்டாக இங்கு தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், சில நாள்களாக பலரிடமும் பணம் கடன் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த திருட்டு சம்பம் நடந்துள்ளது.

தாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி செயின் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்