‘சாட்டையின் சேட்டை..’ சாட்டை துரைமுருகன் பற்றி திருச்சி சூர்யா சிவா வெளியிட்ட ஷாக் ஆடியோ..!
திருச்சியில் பெண் பணியாளர் ஒருவரின் புகாரில், சம்மந்தப்பட்ட முதலாளியிடம் ரூ50 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக, சாட்டை துரைமுருகன் மீது, பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் திருச்சி சூர்யா.
திருச்சி சூர்யா சிவா-சாட்டை துரைமுருகன் போர் ஓய்ந்தபாடில்லை. திமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்த பிறகும், பாஜகவில் இருந்து விலகிய பிறகும், அதிரடியான ஆடியோக்களை வெளியிடுவதில்,திருச்சி சூர்யா அதிரடியானவராக அறியப்படுகிறார். சமீபமாக, யூடியூப் பிரபலங்கள் மீது படையெடுத்துள்ள திருச்சி சூர்யா, அவர்கள் பற்றிய விவகாரங்களை ஆடியோ, வீடியோ என வெளியிட்டு வருகிறார். அவர் குறிப்பிடுபவர்கள் யூடியூப் பிரபலங்களாக அவர்கள் இருந்தாலும், அவர்களும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் முகமாக அல்லது ஆதரவாளர்களாக அறியப்படுபவர்களாகவே உள்ளனர்.
இதனால் திருச்சி சூர்யா வெளியிடும் தகவல்கள், அவர்களை மட்டுமின்றி, அவர்கள் சார்ந்த கட்சி அல்லது அமைப்பை பயங்கர டேமேஜ் செய்வதை காண முடிகிறது. அந்த வகையில், திருச்சி சூர்யா சிவா-சாட்டை துரைமுருகன் எக்ஸ் தள போர் கடுமையாக போய்க்கொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் பற்றி, தன்னுடைய எக்ஸ் தளத்தில் திருச்சி சூர்யா பதிவிட்டுள்ள தகவல், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பெண் பணியாளர் ஒருவரின் புகாரில், சம்மந்தப்பட்ட முதலாளியிடம் ரூ50 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக, சாட்டை துரைமுருகன் மீது, பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் திருச்சி சூர்யா, அது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணுடன் சாட்டை துரைமுருகன் பேசியதாக, ஒரு ஆடியோவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு:
அந்தரங்க ஆடியோவா?
‘திருச்சியில் பர்னிச்சர் கடையில் பணியாற்றிய பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்து, பாலியல் புகார் கொடுத்த ஓனரையே மிரட்டி 50 லட்சம் பணம் பறிக்கும் செயலில் நாதக உதவியுடன் செய்தது சமீபத்தில் அம்பலமானது. அந்த ஜனனி என்கிற பெண்ணும் சாட்டையும் பேசிக்கொள்ளும் அந்தரங்க ஆடியோ.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. தொடரும்’
என்று அந்த பதிவில் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள், குற்றச்சாட்டுகளுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது. பொதுவாழ்கையில் ஈடுபடுவோர் பொதுத்தளத்தில் பதிவு செய்யும் கருத்துக்களின் அடிப்படையில், தகவலுக்காக மட்டுமே இவை செய்தியாக்கப்படுகிறது.
டாபிக்ஸ்