TOP 10 NEWS: ’கொடநாடு கொலை வழக்கு! நாதகவில் தாசில்தார்! மழை எச்சரிக்கை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’கொடநாடு கொலை வழக்கு! நாதகவில் தாசில்தார்! மழை எச்சரிக்கை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’கொடநாடு கொலை வழக்கு! நாதகவில் தாசில்தார்! மழை எச்சரிக்கை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil
Nov 15, 2024 07:27 PM IST

TOP 10 NEWS: கொடநாடு கொலை வழக்கு குறித்து கேள்வி, நாம் தமிழர் கட்சியில் தாசில்தார் சர்ச்சை, அமைச்சர் துரைமுருகன் பேச்சு, அன்பில் மகேஸ்க்கு அன்புமணி கேள்வி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’கொடநாடு கொலை வழக்கு! நாதகவில் தாசில்தார்! மழை எச்சரிக்கை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: ’கொடநாடு கொலை வழக்கு! நாதகவில் தாசில்தார்! மழை எச்சரிக்கை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

2.நாம் தமிழர் கட்சியில் தாசில்தார்

நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்த நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் வட்டாட்சியர் செல்வகுமார், பணியில் இருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். எழுத்துப்பூர்வமாக அவரிடம் மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.

3.துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை 

“என்னை கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன்.. ஆனால், கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன்!”- காட்பாடியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமான பேச்சு.

4.விஜய் குறித்து சரத்குமார் பேச்சு

விஜய் சொல்கிற மாதிரி உச்சநடிகராக பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்தபோதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன்; நாங்கள் இயக்கம் தொடங்கிய போது மாபெரும் இரு தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம் என நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் பேட்டி. 

5.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், கிருஷ்ணகிரி, கரூர், நீலகிரி, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

6.ஸ்டாலின் ஆட்சி மக்களுக்கான ஆட்சி

மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக இந்த ஸ்டாலின் ஆட்சி இயங்கி வருகிறது. எதிர்கால தமிழ்நாடு வளமான தமிழ்நாடாக இருக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

7.டாஸ்மாக் கடைகளில் பில் 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மது பாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்து உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகள் மற்றும் செங்கல்பட்டில் உள்ள 89 கடைகள் என மொத்தம் 220 கடைகளில் பில் வழங்கும் நடைமுறை அறிமுகம் ஆகி உள்ளது. 

8.கிண்டி மருத்துவமனை விளக்கம் 

கிண்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விக்னேஷுக்கு முறையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. உடல்நிலை மோசமடைந்த உடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி உயர்சிகிச்சை அளித்தோம் என கிண்டி அரசு மருத்துவமனை விளக்கம்.

9.அன்பில் மகேஸ் மீது அன்புமணி விமர்சனம்

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியவில்லை என்பது கவலையளிக்கும் உண்மையாகும் என அன்புமணி ராமதாஸ் கருத்து. 

10.மருத்துவர் ராமதாஸ் கண்டனம் 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் கல்குவாரிக்கு அருகில் உள்ள நிலத்திற்கு சென்ற போது, அங்கிருந்த குண்டர்களால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் சிறைவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அதிகாரிகளின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளனர். வேளாண் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கருத்து. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.