Fact Check: திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ.. இது உண்மையா?
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூற்று: திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர்
உண்மை: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்தே பரவுகிறது.
திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“என்ன Brandன்னு சொல்லீட்டு ஆடு சாமி. #திராவிடியா_மாடல்” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
உண்மையா என சரிபார்த்தல்..
திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
உண்மையில் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது அறிய முடியாவிட்டாலும் குறிப்பிட்ட வீடியோ வைரலாகிய காலகட்டத்தில் தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவே தற்போது திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்பதாக பரவுகிறது.
முடிவு என்ன?
திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் News checker Tamil-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
இதனிடையே, வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது. ஆதார் அட்டையை காட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லலாம் என்று அறிவித்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
“உங்கள் வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது. ஆதார் அட்டையை காட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லலாம்” என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நிதின் கட்கரி
வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது என்று நிதின் கட்கரி அறிவித்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து நியூஸ் செக்கர் தமிழ் குழு தேடியது.
இத்தேடலில் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் இடைவெளிக்கு குறைவான தொலைவில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று நிதின் கட்கரி அறிவித்ததாக கூறி நிதின் கட்கரியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று மார்ச் 22, 2022 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் வீடியோவின் மற்றொரு நீண்ட வடிவம் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவில், “சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் ஆதார் அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு அனுமதிச் சீட்டு (Pass) வழங்கப்படுகின்றது. அவர்கள் அதை பயன்படுத்தி பயணம் செய்யலாம். அதேபோல் 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே வரும். அதற்கு மேல் வந்தால் அது சட்டப்படி குற்றமாகும். நான் உறுதியளிக்கின்றேன் இன்னும் மூன்று மாதத்திற்குள் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு சுங்கச்சாவடியே இருக்கும். அதற்கு மேல் இருந்தால் அது மூடப்படும்” என்று அமைச்சர் நிதின் கட்கரி பேசி இருப்பதை காண முடிந்தது.
வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது என்று நிதின் கட்கரி அறிவித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவர் சுங்கச்சாவடிக்கு அருகில் இருப்பவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றே கூறினார். அந்த அனுமதிச் சீட்டுக்கும் மாதம் ரூ.330 கட்டணமாக செலுத்த வேண்டும்.
டாபிக்ஸ்