DMK: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகி! தட்டித்தூக்கிய திமுக தலைமை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகி! தட்டித்தூக்கிய திமுக தலைமை!

DMK: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகி! தட்டித்தூக்கிய திமுக தலைமை!

Kathiravan V HT Tamil
Jul 30, 2024 04:09 PM IST

இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்புராஹிமை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது

DMK: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகி! தட்டித்தூக்கிய திமுக தலைமை!
DMK: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகி! தட்டித்தூக்கிய திமுக தலைமை!

போதை பொருட்கள் கடத்தல் 

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3  கைது செய்யப்பட்டனர்.  

சென்னையில் இருந்து பஸ் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் போதை பொருள் கடத்தப்படுவதாகவும், புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மையமாக கொண்டு இந்த கடத்தல் நடைபெறுவதாகவும் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. 

சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட நபர்

இதனை அடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடந்த 24ஆம் தேதி கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், பயணி போல் சந்தேகப்படும் வகையில் நின்ற, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசல் ரஹ்மான் என்பவரை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். 

செங்குன்றத்தில் பதுங்கல்!

அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்ததில் 5.979 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. 

விசாரணையில் அவரது கூட்டாளிகள், சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் குடோன் ஒன்றில் போதை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர். 

70 கோடி ரூபாய் சந்தை மதிப்பு 

அவருடன் கடந்த 27ஆம் தேதி அன்று இரவு சென்ற அதிகாரிகள், சென்னையை சேர்ந்த மன்சூர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 954 கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருகளை பறிமுதல் செய்தனர். 

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு 70 கோடி ரூபாய் ஆகும். 

இலங்கைக்கு கடத்த முயற்சி 

இந்த போதை பொருட்களை சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் தேடப்பட்டு வருகின்றனர். 

கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் 

இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்புராஹிமை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சித் தலைமை அறிவித்து உள்ளது.  

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்புராஹிம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அடுத்தடுத்து கைதாகும் திமுகவினர்

போதை பொருட்களை கடத்தியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து ஜாபர் சாதிக்கை அக்கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.