Reservation : பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Reservation : பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Reservation : பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Divya Sekar HT Tamil
Aug 01, 2024 11:19 AM IST

Supreme Court : பட்டியல் இனத்தில் மிகவும் பின் தங்கியவருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பட்டியலின இட ஒதுக்கெட்டில் உள்ஒதுலுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

பஞ்சாப், ஹரியானா தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கனவே உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளன. அந்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு திமுக அரசு அருந்ததியினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பு அளித்தது. 

ஆனாலும், ஏற்கனவே உள் ஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், ஹரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 

7 நீதிபதிகள் அமர்வில் விசாரணை

அந்த வழக்குகள் ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதம் 7 நீதிபதிகள் அமர்வில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திர சூடு தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

இதில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும். பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என பெரும்பான்மை தீர்ப்பளித்தது. உள் ஒதுக்கீடு சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பில் நீதிபதி பெலா திரிவேதி மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. அதன்பிறகு பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை.இதன் காரணமாக உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்த தடையும் இல்லை. மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடையாது என உச்ச நீதிமன்றம் இறுதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.