’கர்நாடகாவுல கன்னடர்களுக்கு 100% இட ஒதுக்கீடு ரெடி! தமிழ்நாட்டுல ஏன் தயக்கம்!’ விளாசும் அன்புமணி!
குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானத்திலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

’கர்நாடகாவுல கன்னடர்களுக்கு 100% இட ஒதுக்கீடு ரெடி! தமிழ்நாட்டுல ஏன் தயக்கம்!’ விளாசும் அன்புமணி!
கர்நாடகத்தில் தனியார் வேலைவாய்ப்பில் 100% கன்னடருக்கே ஒதுக்கீடு வழக்கி உள்ளது போல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் முழுக்க முழுக்க கன்னடர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்ற சட்ட முன்வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக அரசுக்கு கண்டனம்
இந்த முன்வரைவு நாளை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய சட்டத்தை கொண்டுவருவாதக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு, அதை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
