தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Presidency College: ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணித்த மாநிலக்கல்லூரி!

Chennai Presidency College: ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணித்த மாநிலக்கல்லூரி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 26, 2023 11:18 AM IST

தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் 3வது இடத்தை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரம்பரியம் மிக்க மாநில கல்லூரி பிடித்துள்ளது.

சென்னை மாநில கல்லூரி
சென்னை மாநில கல்லூரி (@greatfulindia (Twitter))

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக அளுநருக்கும் அரசுக்கும் இடையே கொள்கை ரீதியான பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு உள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பாக தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதே போல் இந்தாண்டுக்கான NIRF 2023 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் 3வது இடத்தை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரம்பரியம் மிக்க மாநில கல்லூரி பிடித்துள்ளது.

இந்நிலையில் தேசிய தர வரிசை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பல கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் மட்டும் 35 உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இதன் காரணமாக விருது வழங்கும் விழாவை தமிழக ஆளுநர் மாளிகை இரண்டாவது ஆண்டாக நடத்தியது. இந்நிலையில் தேசிய தரவரிசை பட்டியலில் 3ஆவது இடத்தை சென்னை மாநிலக்ககல்லூரி இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் அரசுக்கல்லூரியான சென்னை மாநிலக்கல்லூரிக்கு விருது வழங்கும் விழாவிற்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வை மாநிலக்கல்லூரி புறக்கணித்துள்ளது.

அரசுக் கல்லூரியான மாநிலக்கல்லூரி தர வரிசை பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் விருது வழங்கும் விழாவை மாநிலக்கல்லூரி புறக்கணித்துள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்