தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வந்தாச்சு ஹாப்பி நியூஸ்.. ரூ.1000 உரிமத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

வந்தாச்சு ஹாப்பி நியூஸ்.. ரூ.1000 உரிமத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 15, 2023 10:35 AM IST

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவோம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்த நிலையில் கடந்த 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1.06 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்