Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?-tamil nadu minister anbil mahesh admitted to hospital in chennai - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?

Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?

Karthikeyan S HT Tamil
Oct 02, 2024 06:44 AM IST

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?
Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி..காரணம் என்ன?

அந்தவகையில், 206-வது தொகுதியாக காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள வாலஜாபாத், உத்திரமேரூர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று (அக்டோபர் 01) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அமைச்சர் வழங்கினார். ஆய்வுகளை முடித்த பிறகு அன்பில் மகேஷ் காரில் சென்னை நோக்கி திரும்பினார்.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேசுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையில் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. முன்னதாக சிகிச்சையில் உள்ள அவரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு நலம் விசாரித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.