பதற்றத்தில் தமிழக தலைமைச் செயலகம் .. திடீரென அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்.. அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
தலைமை செயலகத்தின் முதல் தளத்தின் தரையில் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர். இதனால் அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு ஏற்பட்டது. இதனால் பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறியதால் பதற்றமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து ஆய்வு செய்த தீயணைப்பு துறையினர் முதல் தளத்தின் தரையில் போடப்பட்ட டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர். இதனால் அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.
தலைமை செயலகத்தில் பதற்றம்
சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்தனர். எதிர்பாராத விதமாக திடீரென நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் முதல் தளத்தில் இருந்த தரையில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் லேசான அதிர்வு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவத் தொடங்கின.
இதை அடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் பணியில் இருந்த ஊழியர்கள் அலறி எடுத்து வெளியேறினார். இதனால் தலைமைச் செயலக வளாகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஊழியர்களிடம் நில அதிர்வு எதுவும் இல்லை. அது வெறும் வதந்தி. முதல் தளத்தில் உள்ள டைல்சில் வெறும் Air Crack மட்டுமே ஏற்பட்டுள்ளது. வேறு எந்த பிரச்சினையும் இல்லை. உள்ளே செல்லுங்கள் என போலீசார் வலியுறுத்தினர். இதையடுத்து ஊழியர்கள் அலுவகத்திற்குள் சென்றனர்.
