நாட்டையே உலுக்கிய திருப்பதி லட்டு விவகாரம்.. திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!-tamil nadu based a r dairy food denies allegations of adulteration in tirupathi laddu issue - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நாட்டையே உலுக்கிய திருப்பதி லட்டு விவகாரம்.. திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!

நாட்டையே உலுக்கிய திருப்பதி லட்டு விவகாரம்.. திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!

Karthikeyan S HT Tamil
Sep 20, 2024 08:53 PM IST

Tirupathi laddu issue:“25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எப்போதும் வந்ததில்லை. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம்.” ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம்.

நாட்டையே உலுக்கிய லட்டு விவகாரம்..திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!
நாட்டையே உலுக்கிய லட்டு விவகாரம்..திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்..ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சொல்வது இதுதான்!

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என்றும், அதில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது 4 ஆய்வக பரிசோதனைகளிலும் உறுதியாகி இருப்பதாகவும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த கலப்பட நெய்யை அனுப்பியது திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஜூன், ஜூலை மாதங்களில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் தொடர்ச்சியாக நெய் அனுப்பி வந்தோம். தற்போது நமது நெய் அங்கே அனுப்பப்படுவதில்லை.

“யார் வேண்டுமானாலும் தரத்தை பரிசோதனை செய்யலாம்”

தற்போது எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தி வருகிறது. அதில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை. அதில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புதான் என பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எங்கள் தயாரிப்பான நெய் தற்போதும் சந்தையில் விற்பனையாகிறது. யார் வேண்டுமானாலும் அதன் தரத்தை பரிசோதித்துக்கொள்ள முடியும்.

25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். எங்கள் தயாரிப்புகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எப்போதும் வந்ததில்லை. எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம்.

ஏ.ஆர். நிறுவன தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரி கண்ணன் கூறுகையில், எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளது அங்கு சென்று எங்களது பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம். எங்களது ஆய்வுக்கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது. மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில் எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம்.

லட்டு தயாரிப்புக்காகவே நெய் அனுப்பப்பட்டது. அங்கு ஒப்பந்தம் போடப்பட்டது நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய பல பேர் உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர். நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் கூட கிடையாது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது அவர்கள் கூறிய பின்பும் தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம்.

"எங்களிடம் ஆதாரம் உள்ளது"

தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் ஆய்வு செய்ததில் எந்த ஒரு குறைகள் இல்லை எனவே வந்துள்ளது. எங்களிடம் எங்களது ஆய்வுக்கான அறிக்கைகளும் திருப்பதி தேவஸ்தானத்தின் ஆய்வருக்கைகளும் உள்ளன.உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்து சென்றுள்ளனர். அதில் இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை." என்றார்.

ஏ.ஆர். நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

திண்டுக்கல் - மதுரை சாலை பிள்ளையார்நத்தம் பகுதியில் உள்ள ஏ.ஆர். டெய்ரி தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்பொறிவாளர் அனிதா உள்ளிட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.