ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Kathiravan V HT Tamil
Jul 18, 2024 08:07 PM IST

Armstrong murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக சந்தேகிக்கப்படும் ரவுடி சம்போ செந்தில் உடன் வழக்கறிஞர் ஹரிஹரன் தொடர்பில் இருந்து உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் திருவேங்கடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

தலைமறைவான அஞ்சலை 

நேற்றைய தினம் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், தாமக கட்சியை சேர்ந்த ஹரிஹரன், அதிமுகவை சேர்ந்த மலர் கொடி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் பாஜகவை சேர்ந்தவரும், பிரபல ரவுடியுமான அஞ்சலை தலைமைமறைவாகி உள்ளார். 

கட்சியில் இருந்து நீக்கம் 

இந்த நிலையில் தாமகவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரனை அக்கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுகவை சேர்ந்த மலர் கொடியை அக்கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.  

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள மலர்கொடியின் கணவர், மறைந்த தோட்டம் சேகர் ஆவார். தோட்டம் சேகரின் ஆட்களோடு சேர்ந்து ஹரிகரன் பழகி வந்து உள்ளார். அவரது மனைவி மலர் கொடி உடனும் ஹரிஹரன் நட்பில் இருந்து உள்ளார்.  

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக சந்தேகிக்கப்படும் ரவுடி சம்போ செந்தில்  உடன் வழக்கறிஞர் ஹரிஹரன் தொடர்பில் இருந்து உள்ளார். 

ஸ்கெட்ச் போட்டது யார்? பணம் கொடுத்தது யார்?

வழக்கறிஞர் ஹரிஹரன் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் மச்சான் அருள் உடன் தொடர்பில் இருந்து உள்ளார். ஆற்காடு சுரேஷ் உடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படும் அஞ்சலையும் இந்த சம்பவத்திற்கு பண உதவி செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.  ஆனால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சொல்லி சம்போ செந்திலுக்கு உத்தரவிட்டது யார்  என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் உள்ளது. கொலையாளிகளுக்கு இருசக்கர வாகனம், கத்தி, போக்குவரத்து செலவுக்கு அஞ்சலை உதவி செய்து உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து கூறப்படுகின்றது. 

அஞ்சலையின் பின்னணி 

வடசென்னையை சேர்ந்த பெண் தாதாவான அஞ்சலை மீது கந்துவட்டி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஓராண்டு குண்டர் சட்டத்திலும் அஞ்சலை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.