Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஹரிஹரன் தமாக-வில் இருந்து நீக்கம்.. ஜிகே வாசன் அதிரடி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஹரிஹரன் தமாக-வில் இருந்து நீக்கம்.. ஜிகே வாசன் அதிரடி!

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஹரிஹரன் தமாக-வில் இருந்து நீக்கம்.. ஜிகே வாசன் அதிரடி!

Jul 18, 2024 01:14 PM IST Divya Sekar
Jul 18, 2024 01:14 PM , IST

  • Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்து 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

(1 / 6)

இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கறிஞரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிர்வாகியுமான ஹரிஹரன் மற்றும் அதிமுக நிர்வாகியும் வழக்கறிஞருமான மலர்கொடி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

(2 / 6)

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அருள் என்பவருடன் இருவரும் தொடர்பில் இருந்ததும், இருவருக்கும் இடையே கொலை சம்பவம் தொடர்பாக லட்சக் கணக்கில் பண பரிவர்த்தனை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் விசாரணைக்கு பிறகு நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

(3 / 6)

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான வழக்கறிஞர் ஹரிஹரனும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

(4 / 6)

இதுதொடர்பாக தமாக தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் மாநில மாணவர் அணி துணை தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட ஹரிஹரன் கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். 

(5 / 6)

முன்னதாக அதிமுக நிர்வாகியான மலர் கொடியை இன்று காலை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்