தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Skill Training : 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள! தொழிற் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

Skill Training : 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள! தொழிற் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

Priyadarshini R HT Tamil
Jun 19, 2023 11:40 AM IST

Skill Training : 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். எனவே மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது –

திருவான்மியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எல்கட்ரீசியன், எலக்ட்ரானிக், மெக்கானிக், கம்யூட்டர் ஆபரேட்டர் & புரோக்ராமிங் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொழிற் பிரிவுகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இதில் சேர தேரச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

மேலும், ஆர்.கே.நகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023ம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. 8 அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொருந்துநர் (பிட்டர்), கம்மியர் மோட்டார் வாகனம் (மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள்), மின்சார பணியாளர் (எலக்ட்ரீசியன்), கம்பியாள் (வயர்மேன்), பற்றவைப்பவர் (வெல்டர்) உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இதற்கான தகுதிகளாக 8 மற்றும் 10ம் வகுப்புகள் முடித்திருக்க வேண்டும்.

இந்த படிப்புகளில் சேர விரும்பமும், தேர்ச்சியும் பெற்ற மாணவர்கள், www.skilltraining.tn.gov.in எனும் இணையதளத்தில் அல்லது கத்திவாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள ஆர்.கே.நகர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அல்லது திருவான்மியூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக சென்று ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம்.

கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளள கைப் பேசி: 98845 34974, 99624 52989, தொலைபேசி: 044- 29540657 எனும் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்