தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கோயில் மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை- சிவனடியார் கைது

கோயில் மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை- சிவனடியார் கைது

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 09, 2023 11:02 AM IST

அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா வழக்கு பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் சிவனடியார் சிவபாலனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சிவனடியார் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது

கைது செய்யப்பட்ட சிவனடியார்
கைது செய்யப்பட்ட சிவனடியார்

ட்ரெண்டிங் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராம எல்லைப் பகுதியில் பாறை குன்றின் மீது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவனடியார் சிவபாலன்(31) என்பவர் கோவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் மடம் அமைத்து சிறுவர்களுக்கு பாடம் கற்பித்து வந்துள்ளார். அங்கு ஏராளமான சிறுவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில், இந்த மடத்தில் படித்த இரண்டு சிறுவர்களிடம் சிவனடியார் சிவபாலன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுவர்கள் அவர்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிறுவர்களின் தாயார் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா வழக்கு பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் சிவனடியார் சிவபாலனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சிவனடியார் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, சிவனடியார் சிவபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மடத்தில் படித்த சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறில் ஈடுபட்ட சிவனடியார் சிவபாலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்