தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Selvaperundhai Comments On Vijayatharani Mla Joining Bjp

Vijayadharani MLA: ‘எங்கிருந்தாலும் வாழ்க! ஆனால்!’ விஜயதாரணி குறித்து செல்வப்பெருந்தகை கருத்து!

Kathiravan V HT Tamil
Feb 24, 2024 03:12 PM IST

“அந்த அம்மையார் எங்கிருந்தாலும் வாழ்க; அன்னை சோனியா காந்தி அவர்கள் இந்த அம்மா மீது கருணை வைத்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார்”

விஜயதாரணி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து
விஜயதாரணி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அவர் இணைந்தார்.

இந்த நிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். அதில், அந்த அம்மையார் எங்கிருந்தாலும் வாழ்க; அன்னை சோனியா காந்தி அவர்கள் இந்த அம்மா மீது கருணை வைத்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். இந்த கட்சி  எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுத்தது. பணி செய்யவில்லை என்றாலும் கட்சியில் பெருமையுடன் வழிநடத்தினோம். 

என்னுடைய பார்வை மீண்டும் அவர் திரும்பி வருவார், அங்கே சென்றவர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரியும். இந்த தேசத்தை பாதுகாக்கும் வேளையில் இப்படிப்பட்ட செயலில் இறங்கி இருப்பது வருத்தம். எங்கிருந்தாலும் வாழ்க!

ஒரு விஜயதாரணி சென்றதால் இந்தியா கூட்டணிக்கு எப்படி பின்னணி ஆகும். இடைத்தேர்தல் வர உள்ளது, கடந்த  தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் எம்.எல்.ஏ வெற்றி பெறுவார்.  இந்த நிமிடத்தில் இருந்தே கட்சித் தாவல் தடை சட்டம் வந்துவிட்டது, அவர் தாமாகவே பதவியை இழப்பார் என கூறி உள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்