RIP Captain Vijayakanth: ‘விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்தபோத நடந்தது என்ன?’ நினைவுகளை பகிர்ந்த ஈபிஎஸ்!-rip captain vijayakanth aiadmk general secretary eps pays homage to dmdk leader captain vijayakanth - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rip Captain Vijayakanth: ‘விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்தபோத நடந்தது என்ன?’ நினைவுகளை பகிர்ந்த ஈபிஎஸ்!

RIP Captain Vijayakanth: ‘விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்தபோத நடந்தது என்ன?’ நினைவுகளை பகிர்ந்த ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Dec 28, 2023 04:18 PM IST

”சிறந்த நடிகர், அரசியலிலும், திரை உலகிலும் தனக்கு என்று தனி முத்திரை பதித்தவர் என ஈபிஎஸ் புகழாரம்”

விஜயகாந்த் உடலுக்கு ஈபிஎஸ் அஞ்சலி
விஜயகாந்த் உடலுக்கு ஈபிஎஸ் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அவரது உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அன்று உடல் நிலை குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் இன்று காலை 6.10 மணிக்கு பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மாலை 4.45 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் உடனான நினைவுகள் குறித்து பலரும் சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிறந்த நடிகர், அரசியலிலும், திரை உலகிலும் தனக்கு என்று தனி முத்திரை பதித்தவர். அவர் 2005ஆம் ஆண்டில் மதுரையில் மாநாடு நடத்தி தேமுதிகவை உருவாக்கினார். 2006இல் விருதாசலத்தில் எம்.எல்.ஏவாக வென்றார். 2011இல் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிகவினர் 29 பேர் வென்றார்கள், ரிஷி வந்தியத்தில் விஜயகாந்த் அவர்கள் வென்று எதிர்கட்சித் தலைவராக ஆனார். 150 படங்களுக்கு மேல் நடித்து திரையில் பெரிய சாதனை படைத்துள்ளார். 1984ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து வரலாறு படைத்துள்ளார். அவரது 100ஆவது படம் கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் பிரபலம் ஆகியது.

நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளுக்கு சென்று நட்சத்திர கலை நிகழ்ச்சி மூலம் நிதிதிரட்டினார், மக்கள் சேவை செய்ய கூடிய விஜயகாந்த் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது அவரை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.