தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vanchinathan Memorial Day: வாஞ்சிநாதன் உயிர் தியாகமும், ஆஷ்துரை மரணமும் - நினைவு தின சிறப்பு கட்டுரை

Vanchinathan Memorial Day: வாஞ்சிநாதன் உயிர் தியாகமும், ஆஷ்துரை மரணமும் - நினைவு தின சிறப்பு கட்டுரை

Karthikeyan S HT Tamil
Jun 17, 2023 08:23 AM IST

இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மறைந்த தினம் இன்று (ஜூன் 17). அவரது நினைவு தின சிறப்புப் பகிர்வு.

வாஞ்சிநாதன்
வாஞ்சிநாதன்

ட்ரெண்டிங் செய்திகள்

செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்தில் உள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யரின் மூத்த மகளான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் திருவனந்தபுரம் - புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலாராக பணியில் சேர்ந்தார்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு:

ஆங்கிலேய அரசு அடக்கு முறையால் ஒடுக்கியும், அடக்கியும் வந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசு மீது கோவமும் வெறுப்பும் இருந்தது. அப்போது வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரது வீரம்மிக்க பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு தன்னையும் சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் வாஞ்சிநாதன். இதற்காக தனது அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது

பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து ஆங்கிலேய ஆட்சியை கவிழ்க்க ரகசியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வந்தார். நண்பர்களையும் விடுதலை போராட்டத்தில் தீவிரமடையச் செய்தார்.

வாஞ்சிநாதன் புதுச்சேரியில் புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. அப்போது மகாகவி பாரதியாருடன் உரையாடல், மேலும் பல இயக்கத்துடன் தன்னை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட தூண்டியது.கிறது.

ஆஷ் துரை கொலை:

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய பல தலைவர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வ.உ.சி.யும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தை அடக்க அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை துப்பாக்கிக்சூடு நடத்த உத்தரவிட்டார். இதில், 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட வாஞ்சிநாதனும், சாவடி அருணாச்சல பிள்ளையும் சேர்ந்து ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல திட்டம் தீட்டினர். அதன்படி, 1911ஆம் ஆண்டு ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்ட ஆஷ் துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் சுட்டுக் கொலை செய்தார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்