தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tasmac: மர்மமாக இறந்துகிடந்த இருவர்; டாஸ்மாக் சரக்கு காரணமா?- குற்றம்சாட்டும் உறவினர்கள்!

Tasmac: மர்மமாக இறந்துகிடந்த இருவர்; டாஸ்மாக் சரக்கு காரணமா?- குற்றம்சாட்டும் உறவினர்கள்!

Karthikeyan S HT Tamil
Jun 13, 2023 10:40 AM IST

Mayiladuthurai: மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்ததே இருவர் உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டாஸ்மாக் (கோப்புபடம்)
டாஸ்மாக் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் பழனிகுருநாதன், பூராசாமி ஆகிய இருவரும் பட்டறைக்குள் வாந்தி மயக்கத்துடன் கிடந்திருக்கின்றனர். அவர்கள் மயங்கிக் கிடந்த பட்டறையில் மூடி திறக்காத ஒரு முழு குவார்ட்டர் பாட்டிலும், காலியான ஒரு குவார்ட்டர் பாட்டிலும் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த இறந்தவர்களின் உறவினர்கள், "டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்ததாலேயே இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களின் இறப்புக்குக் காரணம் டாஸ்மாக் மதுதான்" எனக் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெரம்பூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ் குமார் தலைமையில் இரும்பு பட்டறையில் இருந்த மதுப்பாட்டிலையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை அருகே இயங்கிவந்த பாரில், கடை திறப்பதற்கு முன்பே மது வாங்கி குடித்து 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள் இறப்புக்கு மதுவில் சயனைடு கலந்திருந்ததே காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மது குடித்ததால் தான் இருவர் உயிரிழந்திருக்கக் கூடும் என உறவினர்கள் குற்றம் சாட்டியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரேத பரிசோதனை முடிவில் தான் இரண்டு பேரின் இறப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்