தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: போதையின் உச்சத்தில் பனைமர உச்சியில் உறங்கிய நபர் - பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

Coimbatore: போதையின் உச்சத்தில் பனைமர உச்சியில் உறங்கிய நபர் - பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

Suriyakumar Jayabalan HT Tamil
May 15, 2023 12:22 PM IST

மது அருந்திவிட்டு பனை மரத்தின் உச்சியில் போதையில் தூங்கி ஆசாமியைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

பனை மரத்தின் உச்சியில் போதை ஆசாமி
பனை மரத்தின் உச்சியில் போதை ஆசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

பனைமரத்து உச்சியில் அமர்ந்து கொண்டு மது அருந்தி ஆசாமிக்குப் போதை தலைப்பு ஏறி உள்ளது. போதியின் உச்சத்தில் இருந்த அவர் அங்கேயே சாய்ந்து உறங்கி விட்டார். இதனால் அங்கு நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டு விட்டனர்.

பின்னர் இது குறித்து கோட்டூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கூச்சலிட்டு அழைத்தும் அவருக்குக் காதில் விழவில்லை. போதை உறக்கத்தில் இருந்த அவரை எழுப்ப முடியாமல் காவல்துறையினர் திணறியுள்ளனர்

பின்னர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும் கீழே வலைவிரித்தும் அந்த நபரை மீட்க முயற்சித்தனர் ஆனால் பயன் அளிக்கவில்லை. அதற்குப் பிறகு இரும்பு கூண்டு பொருத்தப்பட்ட கிரேன் கொண்டுவரப்பட்டது.

அதன் மூலம் வேலை சென்ற தீயணைப்பு வீரர்கள் மது போதையில் பனைமரத்தின் கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்தவரை லாபமாக அப்படியே தூக்கி இரும்பு கூண்டில் வைத்து கீழே கொண்டு வந்தனர். அவரை மீட்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலும் போராடினர்.

பனைமரத்திலிருந்து போதை ஆசாமியைக் கீழே கொண்டு வந்த பிறகு அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணன் என்பது தெரிய வந்துள்ளது. மது அருந்திவிட்டு மரம் ஏறுவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

100 அடி உயரமுள்ள பனைமரத்தின் உச்சியில் மது அருந்திவிட்டு உறங்கிய நபரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்