Top 10 News: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது முதல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது முதல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

Top 10 News: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது முதல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

Karthikeyan S HT Tamil
Nov 09, 2024 07:09 PM IST

தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், க்ரைம் செய்திகள், அரசியல் தொடர்பான இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

Top 10 News: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது முதல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!
Top 10 News: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது முதல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் கோகுலம் கார்டன் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கோகுலம் தங்கராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் தவணை முறையில் பணம் கட்டிய 30க்கும் மேற்பட்டோர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தற்போது வரை நிலத்தை வழங்காததால் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி

“விசிகவில் Revenue District என்கிற அடிப்படையில் இல்லாமல், Electoral District என்கிற அடிப்படையில் நிர்வாகத்தை மாற்றி அமைக்கும் முயற்சியாக 234 தொகுதிகளையும் 234 தொகுதி மாவட்டங்களாக அறிவிக்க இருக்கிறோம்; ஒரு வாரத்தில் அது குறித்து அறிவிப்போம்; Grass Root Level-ல் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க உள்ளோம்; தேர்தல் காலங்களில் எளிமையாக இருக்கும் என்பதால் இதை நடைமுறைப்படுத்த உள்ளோம்” - விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி

குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர்

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார்.

"மருத்துவமனை விளம்பரங்களுக்கு தடையில்லை"

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மருத்துவ கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

27 ஆண்டுகளுக்கு பிறகு கைது

கடந்த 1997 ஆம் ஆண்டு வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பன்னீர்செல்வம் என்பவர் 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்களை முடிப்பதற்காக மதுரை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இவரை விருதுநகரில் வைத்து கைது செய்தனர்.

மலையேற்ற திட்டம் - பொதுநல மனு

தமிழ்நாடு வனத்துறை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மலையேற்ற திட்டம் (ட்ரெக் தமிழ்நாடு) வன விலங்குகளுக்கு தீங்காக அமையும் என்பதால் அத்திட்டத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் பேரணி

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.

அரசு ஊழியர்கள் சங்கம்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டதால் சுமார் 5 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இ-பாஸ் நடைமுறை சரியாக அமல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.