RB Udayakumar: கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது - மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rb Udayakumar: கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது - மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!

RB Udayakumar: கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது - மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!

Karthikeyan S HT Tamil
Jul 30, 2024 01:52 PM IST

RB Udayakumar Arrest: கடந்த 2021 ஆண்டில் அப்போது எதிர்க்கட்சி தலைவவராக இருந்த ஸ்டாலின் இப்பகுதிக்கு வந்த போது திமுக ஆட்சி மூன்று மாதங்களில் வந்துவிடும் அப்போது கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று கூறினார்.

RB Udayakumar: கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது - மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!
RB Udayakumar: கப்பலூர் டோல்கேட் விவகாரம்.. ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது - மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!

இதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை அனுமதிப்பதில் 2020 ஆம் ஆண்டில் இருந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். கப்பலூர் சுங்கச்சாவடி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனிடையே, ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தென் தமிழகத்தில் நுழைவாயிலாக கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி கடந்த 2010 ஆண்டு அமைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

தற்போது 2021ம் ஆண்டிலிருந்து கட்டண விதிமுறை தளர்த்தப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுங்கச்சாவடி அபதார கட்டண நோட்டீஸ் விடப்பட்டு ரூ. 2 லட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை அபதார கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது .

கடந்த 2021 ஆண்டில் அப்போது எதிர்க்கட்சி தலைவவராக இருந்த ஸ்டாலின் இப்பகுதிக்கு வந்த போது திமுக ஆட்சி மூன்று மாதங்களில் வந்துவிடும் அப்போது கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று கூறினார். அவர் கூறி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை அவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல அறவழியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது எங்களை கைது செய்துள்ளனர்.

எங்கள் கோரிக்கை எல்லாம் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதேபோல் நிலுவை கட்டணம் என அனுப்பப்பட்ட லீகல் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்று போராடி வருகிறோம்." என்று தெரிவித்தார். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிப்பதால் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், உள்ளூர் பொதுமக்கள், அதிமுகவினர் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முழக்கம் எழுப்பினர். இதனால் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போலீசார் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாததால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, காவல் துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.