CM MK Stalin: 'ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது?'- மம்தா விவகாரத்தில் பொங்கிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cm Mk Stalin: 'ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது?'- மம்தா விவகாரத்தில் பொங்கிய முதல்வர் ஸ்டாலின்!

CM MK Stalin: 'ஒரு மாநில முதல்வரை நடத்தும் விதமா இது?'- மம்தா விவகாரத்தில் பொங்கிய முதல்வர் ஸ்டாலின்!

Jul 27, 2024 03:54 PM IST Karthikeyan S
Jul 27, 2024 03:54 PM , IST

  • MK Stalin slams: நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மைக் ஆஃப் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும், பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது என்றும் கூறி மேற்கு வங்க முதல்வர் வெளிநடப்பு செய்திருந்தார். இதற்கு “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது?” என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

(1 / 6)

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் தான் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தில் அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

(2 / 6)

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

(3 / 6)

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.(HT_PRINT)

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

(4 / 6)

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.(PTI)

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9-வது ஆட்சிக்குழு கூட்டம் டெல்லியில் இன்று (ஜூலை 27) காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் பலர் புறக்கணித்துள்ளனர். ஆனால் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

(5 / 6)

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். வெளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு முன் பேசியவர்கள் 20 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் 5 நிமிடம் மட்டும் தான் எனக்கு பேச அனுமதிக்கப்பட்டதாக கூறிய மம்தா, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார். 

(6 / 6)

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். வெளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனக்கு முன் பேசியவர்கள் 20 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் 5 நிமிடம் மட்டும் தான் எனக்கு பேச அனுமதிக்கப்பட்டதாக கூறிய மம்தா, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார். (PTI)

மற்ற கேலரிக்கள்