11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

Divya Sekar HT Tamil
May 14, 2024 09:51 AM IST

11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.91.17% மாணவர்கள் தேர்ச்சி. தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்டம் மின் சாதனங்கள் அறைக்கு கொண்டுவர தடை விதிக்கப்பட்டது. தேர்வு முறைகேடுகளை தவிர்க்க மாநிலம் முழுவதும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வு பணியில் ஈடுபட்டன.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in  என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 8,11,172

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்:7,39,539 (91.17%)

மாணவியர் 4,04,143 (94.69%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 3,35,396 (87.26%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட 7.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச்- 2023-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 7,76,844.

தேர்ச்சி பெற்றோர் 7,06,413. தேர்ச்சி சதவிகிதம் 90.93%

கடந்தமுறை மாணவிகள் 94.36%,

மாணவர்கள் 86.99% தேர்ச்சி பெற்றிருந்தனர்

மாவட்ட அளவில் திருப்பூர் 96.38% - முதல் இடம், ஈரோடு 96.18% இரண்டாம் இடம், கோவை 95.73% மூன்றாம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை 17வது இடம் 91.37

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1964

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 241

கடந்த முறை அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 84.79

இந்த முறை அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 85.75

கடந்த முறை அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 93.20

இந்த முறை அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 92.36

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியானது. இதில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% சதவீதம் ஆகும்.வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகம தேர்ச்சி பெற்றனர்.. மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.53%. மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.58%. மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி சதவீதத்தில் தமிழகத்தில், அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றது. மொத்தம் 97.31 சதவீதம் பேர் அரியலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற நிலையில், அங்கு மாணவர்கள் 4726 பேரும், மாணவிகள் 4582 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

இரண்டாவதாக, சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது. 97.02 சதவீதம் தேர்ச்சியை பெற்ற சிவகங்கை மாவட்டத்தில், 8271 மாணவர்களும், 8908 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்

முன்னதாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சிறிது அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44 சதவீதமும் மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.