TTF Vasan politics: கட்சி ஆரம்பிக்கும் TTF வாசன்: போலீஸ் தாக்கியதால் முடிவு!
TTF Vasan enters politics: ஆலமரமா வளர்வதை விட, அசுர மரமா வளர்ந்துவிடுவான். அந்த மாதிரி நான் செம்ம வெறியாகிட்டேன். டி.டி.எப்.,யை பிராண்டாக மாத்தும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் அதை அறிவிக்கிறேன்.
பைக் ரைடரான TTF என்கிற யூடியூப் நடத்தி வரும் வாசன் என்பவர், இளைஞர்களை கவரும் யூடியூப்பராக வலம் வருகிறார். சமீபத்தில் விதிகளை மீறி பைக் ஓட்டியதாக அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடலூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வாசன் மீது சமீபத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடியும் நடந்தது.
தொடர்ந்து தன் மீதான போலீசாரின் தாக்குதலுக்கு பதிலடி தரவும், அதிகாரம் இருந்தால் தான் போலீஸ் நெருங்காது என முடிவு செய்த வாசன், புதிய கட்சி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சூசமாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார் TTF வாசன். அந்த பேச்சை வைத்து வாசன் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை யூகிக்க முடிகிறது. இதோ அந்த வீடியோவில் வாசன் பேசியது:
கடலூரில் நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் நம்ம பசங்க மீது போலீசார் கை வைத்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. என் மீது வழக்கு போடுவது எனக்கு கவலையில்லை. துணிக்கடைக்குச் சென்று, கட்டைப் பை வாங்குவதைப் போல தான் நான் வழக்குகளை வாங்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால், என் பசங்க மீது கை வைப்பதை ஏற்க முடியாது.
போலீசாரிடம் இது குறித்து கேட்ட போது, பசங்க தான் கல் எறிந்தார்கள் என்றும், போலீசார் அவர்களை தாக்கவில்லை என்றும் பொய் சொல்கிறார்கள். ஒருத்தனை போட்டு குத்திக்கிட்டே இருந்தால், ஒரு கட்டத்தில் வெறியாகிடும்.
அவன் ஆலமரமா வளர்வதை விட, அசுர மரமா வளர்ந்துவிடுவான். அந்த மாதிரி நான் செம்ம வெறியாகிட்டேன். டி.டி.எப்.,யை பிராண்டாக மாத்தும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் அதை அறிவிக்கிறேன். முன்னாடியே நான் பார்த்திருக்கிறேன்,நடுவில் போலீஸ் இருக்கும் போதே இரு கட்சிக்காரர்கள் மோதிக்கொள்வார்கள்.
ஒரு போலீஸ் கூட எதுவும் கேட்கமாட்டார்கள். ஆனால், நம்ம பசங்க மீது போலீஸ் கை வைத்துவிட்டார்கள். அதெல்லாம் என மனதில் இருக்கு, நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை பொறுமையாக சொல்கிறேன். இப்போ நான் எது சொன்னாலும், விமர்சனம் செய்ய நிறைய பேர் இருப்பதால், அதை என்னால் வெளிப்படையாக கூற முடியாது.
யானை குழிக்குள் விழுந்தால் எறும்பு எட்டிப்பார்க்குமாம்! அந்த கதையாக தான் இருக்கிறது. யானைக்கும் அடி சறுக்கும். அதே மாதிரி, யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும். விடுங்க பார்த்துக்கலாம்!
நான் 100 டிடிஎஸ்.,களின் போட்டோக்களை என் உடலில் டாட்டூ குத்தப் போகிறேன். கஜினிமாதிரி ஆகிடுமா என்றால் பரவாயில்லை. நான் பசத்திற்கு ஏங்கும் ஆளு. அதற்காக எனக்கு பாசம் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. என் தந்தை இறந்தபின் ரொம்ப கவலைப்பட்டேன்!,’’
என்று வாசன் அந்த வீடியோவில் சூசகமாக கூறியுள்ளார்.
டாபிக்ஸ்