Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 18, 2024 06:13 PM IST

சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இன்று ஆஜர் செய்யப்பட்டார்.

Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Savukku Shankar: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

சவுக்கு சங்கர் வழக்கின் பின்னணி

போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்யும் பொழுது அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் அதனை கைப்பற்றிய தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது கஞ்சா வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இதனடிப்படையில் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அவர் மீது இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழக்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பிடிவாரண்ட் பிறப்பித்தது ஏன்?

இதனையடுத்து மதுரை மத்திய சிறையிலிருந்த வெளியில் வந்த சவுக்கு சங்கர் மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்களை யூட்யூப் சமூக வலைதளத்தில் பேசி வந்தார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் போதை பொருள் சிறப்பு தடுப்பு நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் மதுரை மாவட்ட சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன், சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இன்று ஆஜர் செய்யப்பட்டார்.

கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணையின் போது முறையாக ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட யூடியுபர் சவுக்கு சங்கருக்கு டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி செங்கமலச்செல்வன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.