தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Kathiravan V HT Tamil
May 20, 2024 04:39 PM IST

”Savukku Shankar: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2நாட்கள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”

’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!
’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

ட்ரெண்டிங் செய்திகள்

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்

தேனி மாவட்டத்தில் இரண்டரை கிலோ கஞ்சா வைத்து இருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் மகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல்துறையால் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் தேனி மாவட்ட காவல்துறை தரப்பில் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் எடுக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

காலையில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது முழு மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று அதற்கான மருத்துவ சான்றுகள் உடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 

சவுக்கு சங்கரிடம் நீதிபதி கேள்வி

காவல்துறை விசாரணைக்கு சம்மதமா என நீதிபதி கேட்டதற்கு அதற்கு எந்த வித ஆட்சேயேயபனையும் இல்லை என சவுக்கு கூறினார். 

இந்த நிலையில் சவுக்கு சங்கருக்கு இரண்டு நாள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  வரும் 22ஆம் தேதி மாலை 3மணிக்கு மீண்டும் சவுக்கு சங்கரை ஆஜர்ப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் கைதின் பின்னணி

யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிந்துள்ளனர்.

மேலும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார். 

ரெட்பிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு

முன்னதாக பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசியதில் உடன்பாடு இல்லை என்றும் அதனை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ரெட்பிக்ஸ் செய்தி நிறுவனம் கடந்த மே மாதம் 15ஆம் தேதி அறிவித்தது.

ரெட்பிக்ஸ் நிறுவனம் விளக்கம்

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பொதுமேலாலர் ஜென் பெலிக்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX-க்கு உடன்பாடு இல்லை, அது RED PIX-ன் கருத்தும் இல்லை. இருப்பினும் அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்துருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.

பெண்களின் மான்பை மதிக்கிறோம்

கடந்த 30-04-2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது RED PIX ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார் அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர RED PIX ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக RED PIX ஊடகம் கருதுகிறது சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்