தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல் - ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!

மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல் - ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ!

Divya Sekar HT Tamil
Apr 03, 2022 11:54 AM IST

மதுரையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ
ஆசிரியை மீது பாய்ந்த போக்சோ

ட்ரெண்டிங் செய்திகள்

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவில் இருப்பவர் ஆசிரியை என தெரியவந்தது. மதுரை-சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்துவரும் இவர் வீட்டில் வைத்து டியூசன் எடுத்துள்ளார். தன்னிடம் டியூசனுக்கு வந்த மாணவர்களை மூளைச்சலவை செய்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் மாணவர்களுடன் உல்லாசமாக இருப்பதை கள்ளக்காதலன் மூலம் வீடியோ மற்றும் போட்டோவும் எடுத்துள்ளார். அதில் ஒரு வீடியோதான் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியை, அவரது கள்ளக்காதலன் வீரமணி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களிடன் விசாரணை நடத்தினர்.அதில், ஆசிரியை ரயிலில் வெளியூர் பயணம் மேற்கொண்டபோது திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த வீரமணி (39) பழக்கமானார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் ஆசிரியையின் கணவர் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு கல்லூரி படிக்கும் மகனுடன் வசித்து வந்த ஆசிரியை அடிக்கடி வீரமணியை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது வீரமணி செல்போனில் இணையதள ஆபாச வீடியோக்களை ஆசிரியைக்கு காண்பித்துள்ளார். நாளடைவில் ஆபாச வீடியோவுக்கு அடிமையான ஆசிரியை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டார். தன்னிடம் டியூசனுக்கு வந்த மாணவர்களை தனது வலையில் வீழ்த்தி ஆசைகளை நிறைவேற்றி கொண்டார். இந்த நிலையில் அவரது கள்ளக்காதலன் வீரமணி வெளியிட்ட வீடியோவால் தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுடன் ஆசிரியை உல்லாசமாக இருந்துள்ளார். அவரது செல்போன்கள் மற்றும் லேப்டாப் மற்றும் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ததில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

பாலியல் விவகாரத்தில் ஆசிரியை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியையை பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்வது என்று சிவகங்கை மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது அதற்கான எழுத்துபூர்வ பணிகள் நடந்து வருகின்றன. 

ஆசிரியையின் வலையில் வீழ்ந்த 3 மாணவர்களையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்