தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbumani : மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி - பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து!

Anbumani : மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி - பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து!

Divya Sekar HT Tamil
Jun 05, 2024 04:56 PM IST

Anbumani Ramadoss : நாட்டின் வளர்ச்சிக்காவும், முன்னேற்றத்திற்காகவும் கடந்த பத்தாண்டுகளில் உங்கள் தலைமையிலான அரசு ஆற்றிய பணிகளும், படைத்த சாதனைகளும் ஈடு இணையற்றவை என பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி - பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து!
மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி - பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து!

ட்ரெண்டிங் செய்திகள்

பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

மக்களவைத் தேர்தலுக்காக வலிமையான அணியை கட்டமைத்ததுடன், அந்த அணியின் வெற்றிக்கான உத்திகளையும் வகுத்த தாங்கள், அனைத்துப் பொறுப்புகளையும் உங்கள் தோள்களில் சுமந்ததுடன், நாடு முழுவதும் 250&க்கும் கூடுதலான இடங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினீர்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட, கிட்டத்தட்ட அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை மேற்கொண்டீர்கள். உங்களின் இந்த கடுமையான உழைப்பும், மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த ஆதரவும், அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் தான் இந்த வெற்றிக்கு காரணமாகும்.

வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்குவீர்கள்

நாட்டின் வளர்ச்சிக்காவும், முன்னேற்றத்திற்காகவும் கடந்த பத்தாண்டுகளில் உங்கள் தலைமையிலான அரசு ஆற்றிய பணிகளும், படைத்த சாதனைகளும் ஈடு இணையற்றவை. அடுத்த ஐந்தாண்டுகளில் அவற்றை விட அதிகமான சாதனைகளை இந்தியா உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. 

அனைத்து எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள்; வளமான, வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான பயணத்தில் நீங்கள் வெற்றி பெற பா.ம.க. சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் 2024

18வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1, 2024 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபற்றது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 16 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) உடனடியாக அமலுக்கு வந்தது. 2019 லோக்சபா தேர்தல் 75 நாட்களில் முடிவடைந்த நிலையில், 2024 இல் சமீபத்திய தேர்தல் செயல்முறை 81 நாட்களுக்கு தொடர்ந்தது.

ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. சிக்கிமில் அந்த மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பலம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) (அஜித் பவார்), ஜனதா தளம் (மதச்சார்பற்ற), அதிமுக (ஓபிஎஸ்), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்), ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி மற்றும் பிற முக்கிய கட்சிகள் உள்ளன. மேலும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், அசோம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், அப்னாடல் (சோனேலால்), ராஷ்ட்ரிய லோக் தளம், நிஷாத் கட்சி, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜனநாயக் ஜனதா கட்சி, ஹரியானா லோகித் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி, நாகா மக்கள் முன்னணி, சிரோமணி அகாலி தளம் சம்யுக்தா, பாரத் தர்ம ஜன சேனா, கேரள காமராஜ் காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி (Athawale of India) , ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா, பிரஹர் ஜனசக்தி கட்சி, ஜன சுராஜ்ய சக்தி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, கோர்கா தேசிய விடுதலை முன்னணி போன்றவை உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்