Pawan Kalyan: சிறைவாசம் கொடுத்த பெருஞ்சினம்; சூத்திரம் வகுத்த பவன்; பக்காவாக பயன்படுத்திய பாஜக! - TDP- சாதித்தது எப்படி?
Pawan Kalyan: “சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஜனாசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மாநிலத்தில் 160 க்கும் மேற்பட்ட சட்டமன்ற இடங்களை வென்றுள்ளது. இதற்கு காரணமானவர் பவன் கல்யாண். - TDP- சாதித்தது எப்படி?

Pawan Kalyan: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 175 சட்டமன்ற தொகுதிகளில், 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று, தன்னுடைய போட்டியாளரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை தோற்கடித்து, மீண்டும் ஆட்சி அரியணைக்கு வந்திருக்கிறார்.
அவரது கூட்டணி கட்சிகளான ஜனசேனா கட்சி (ஜே.எஸ்.பி) பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவற்றுடன் சேர்ந்து நாயுடு 160க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இமால வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
செய்தி தொடர்பாளர் சொல்வது என்ன?
இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுசந்தா சுபூதி கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சி-பாஜக கூட்டணியின் மகத்தான வெற்றி, ஜெகன் ரெட்டியின் வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டாலும், ஆந்திர மக்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தையும், விரக்தியையும் பிரதிபலிக்கிறது” என்றார்.
ஜனசேனா கட்சி செய்தி தொடர்பாளர் அஜய் குமார் பேசும் போது, “ பவன் கல்யாண் ஒரு கேம் சேஞ்சர். அவரது வற்புறுத்தலின் பேரில்தான் நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி வைக்க ஒத்துக்கொண்டார்.” என்றார்.
வெற்றிக்கு வித்திட்ட பொறி
எட்டு மாதங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, வீறு கொண்ட எழுந்த பவன் கல்யாண், மார்ச் மாதத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த உடன, பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணியுடன் இணைந்து தன்னுடைய ஜனசேனா கட்சி தேர்தலை சந்திக்கும் என்று அறிவித்தார்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பாஜக உடன் கூட்டணி வைக்க அச்சம் தெரிவித்தனர். ஆனால் கல்யாண் அவர்களுக்கு ஒரு நியாயமான ஒப்பந்தம் இருப்பதாக உறுதியளித்தார். டெல்லியில் பாஜக தலைமையுடன் அவர் கொண்டிருந்த நல்ல தொடர்பு, தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டமன்ற இடங்கள் மற்றும் 17 மக்களவைத் தொகுதிகள், ஜேஎஸ்பி கட்சிக்கு 21 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகள் மற்றும் பாஜகவுக்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 6 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படுவதை உறுதி செய்தது.
பவன் கல்யாணின் முதிர்ச்சி
ஸ்ரீ கிருஷ்ணதேவராய பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கே.சந்திரசேகர் கூறுகையில், "பவன் கல்யாண் அரசியலில் தன்னுடைய முதிர்ச்சியைக் காட்டியுள்ளார். அதிக இடங்களைக் கேட்டு, பாஜக மேலிடத்திற்கு சங்கடத்தை உருவாக்காமல், கூட்டணியில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அது தற்போது திருப்பு முனையாக மாறியிருக்கிறது. இடங்களை கைப்பற்றுவது மட்டுமல்லாமல் வெற்றியில், அதைத்தாண்டியும் பவனின் பங்கு அதிகமாக இருந்திருக்கிறது.
நாயுடு கைது செய்யப்படும் வரை, கல்யாணும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் அவரவர் பாதைகளில் பயணித்துக்கொண்டிருந்தனர். நாயுடுவின் கைதுக்குப் பிறகு, களத்தில் இறங்கிய பவன் கல்யாண் இரு கட்சித்தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினார்.
கல்யாண் ஒரு ஆல்ரவுண்டராக பணியாற்றினார். நாயுடுவின் வளர்ச்சிக்காக அவர் போராடினார். அனைத்தையும் தனி ஆளாக எதிர்கொண்டார். நாயுடு ஆதரவு மற்றும் ஜனசேனா அலையை பாஜக பயன்படுத்திக் கொண்டது.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்