தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ops Son Ravindranath Assets Worth Rs. 10 Crore Are Frozen

OPS Son Ravindranath : கல்லால் நிறுவன வழக்கு.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

Divya Sekar HT Tamil
May 28, 2023 07:26 AM IST

கல்லால் நிறுவன வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

ரவீந்திரநாத்தின் நிறுவனத்துக்கு கல்லால் நிறுவனத்திடம் இருந்து 8.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தமிழ் குமரனின் ரூ.15 கோடி மதிப்பிலான, தி.நகர் இல்ல சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

அண்மையில், ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஒரு மனுவை அளித்தார். அதில் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதால், அவரை அதிமுக எம்.பி. என்ற அங்கீகரத்தை வழங்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருப்பதால் இந்த கடிதத்தை ஏற்கக்கூடாது என ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்தார். அதனால் தற்போது வரை ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுக எம்.பியாகவே தொடர்கிறார்.

முன்னதாக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக உதயநிதி அறக்கட்டளை நிர்வாகியும் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் கிருத்திகா உதயநிதியின், 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்