EPS vs OPS: 'பாஜக உடன் கூட்டணி இல்லையா? ஈபிஸ்க்கு இதுதான் நடக்கும்' போட்டு உடைத்த ஓபிஎஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Ops: 'பாஜக உடன் கூட்டணி இல்லையா? ஈபிஸ்க்கு இதுதான் நடக்கும்' போட்டு உடைத்த ஓபிஎஸ்

EPS vs OPS: 'பாஜக உடன் கூட்டணி இல்லையா? ஈபிஸ்க்கு இதுதான் நடக்கும்' போட்டு உடைத்த ஓபிஎஸ்

Kathiravan V HT Tamil
Nov 16, 2023 08:34 AM IST

”எடப்பாடி பழனிசாமிக்கு நான் தூதுவிட்டதாக கூறப்படும் செய்தி ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்”

முன்னாள்  முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், கட்சி ஒன்றுபட்டால்தான் வெற்றி அடைய முடியும் என்று நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன் என்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரிப்பீர்களா எண்ற கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார்.

மேலும் நானும் டிடிவி தினகரனும் இணைந்துள்ளோம், மாண்புமிகு சின்னம்மா அவர்கள் வருவது குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் எங்களை சந்தித்து நமது எதிர்க்கட்சி திமுகதான். நமது ஓட்டுக்கள் சிதறக்கூடாது என்பதால் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என சொன்னார்கள்.

எனவே நானும், டிடிவி தினகரனும் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் பெற்றோம். ஆனால் என்ன நடந்து, 66 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் எடப்பாடி தோற்றகடிக்கப்பட்டார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை, ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்றபோது ஈரோட்டில் அதிமுக பெரும் வெற்றி பெற்றது என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள் என கூறினார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை மக்கள் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அந்த முடிவை எடுப்போம் என கூறிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கு நான் தூதுவிட்டதாக கூறப்படும் செய்தி ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய் என்றார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளது குறித்த கேள்விக்கு, பாஜக இல்லமால் இல்லாமல் எடப்பாடியால் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.