ADMK vs DMK: ’சட்டப்பேரவையில் என்னை அனுமதித்து இருந்தால் கிழி கிழி என கிழித்து இருப்பேன்!’ ஈபிஎஸ் ஆவேசம்!
Edappadi Palaniswami: சட்டமன்றத்தில் அமைச்சரை விட சட்டப்பேரவைத் தலைவர்தான் அதிகம் பேசுகிறார். அமைச்சர் சொல்ல வேண்டிய பதில்களை சபாநாயகரே சொல்லிவிடுகின்றார்.
பேரவையில் நான் பேசுவதை நேரலை செய்து இருந்தால், கிழி கிழி என கிழித்து இருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
எதிர்க் கட்சிகளை முதலமைச்சர் கிழி கிழி என கிழித்து இருப்பார் என சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறி உள்ளார்.
அதிமுக உண்ணாவிரதம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி அதிமுகவினர் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, தேமுதிக, நாம் தமிழர், புரட்சி பாரதம், இந்திய குடியரசுக் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சிபிஐ விசாரணை
உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு நெஞ்சை பதற வைத்து உள்ளது. விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோய் உள்ளன. நீதிமன்றம் மூலம் சிபிஐ விசாரணை கிடைக்கும் என்று நம்புகிறோம்.
சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மக்கள் மன்றத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அடுத்தக்க்கட்ட போராட்டம் குறித்து தலைமைக்கழக நிர்வாகிகள் உடன் கலந்து முடிவு செய்வோம்.
அரசுக்கு சாதகமாகவே இருக்கும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முதலமைச்சர் அஞ்சுகிறார். சிபிஐசிடி விசாரணையால் எந்த பயனும் கிடைக்கப்போவது இல்லை. சிபிசிஐடி விசாரணை அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என கூறினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இருந்து இருந்தால் முதலமைச்சர், கிழி கிழி என்ற கிழித்து இருப்பார் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்த கேள்விக்கு, பேரவையில் நான் பேசுவதை நேரலை செய்து இருந்தால், கிழி கிழி என கிழித்து இருப்பேன் என தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
சட்டமன்றத்தில் அச்சத்தோடு வெளியேறு கின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அச்சம் என்பது எங்கள் அகராதியில், அதிமுக மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்டகட்சி.
காவல்து றை உள்ளிட்ட மானிய கோரிக்கைகளில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக விற்கப்படுகின்றது.
சட்டமன்றத்தில் பேச முடியவில்லை
பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. அமைச்சரை விட சட்டப்பேரவைத் தலைவர்தான் அதிகம் பேசுகிறார். அமைச்சர் சொல்ல வேண்டிய பதில்களை சபாநாயகரே சொல்லிவிடுகின்றார். அந்த ஆசனம் புனிதமான ஆசனம், அதில் அமர்ந்து உள்ளவர்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நாடகம் ஆட விரும்பவில்லை என கூறினார்.
திமுக ஆட்சி ஏற்பட்டது முதல் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகின்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், கள்ளச்சாராய மரணங்கள் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க குரல் கொடுக்கவில்லை. கூட்டணி தேர்தலோடு முடிந்துவிட்டது. ஆனால் எந்த கட்சியும் மக்கள் குரலாக ஒலிக்கவில்லை.
அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆதரவு அளித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், “மரியாதைக்குரிய நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள், எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி, அவர்கள் நிர்வாகிகளை அனுப்பி வைத்தார் அதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்